இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இலங்கை தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு
இந்தியப் பெருங்கடலில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கம் இன்று (01)அதிகாலை ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்கள் வசிக்காத பகுதியில் ஏற்பட்டுள்ளதால், எந்தவொரு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
நிலநடுக்கம் ஏற்பட்ட பிராந்தியம் முற்றிலும் மக்கள் வசிக்காத கடல் பகுதியாகும். எனவே, உயிர்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை பதிவாகவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையங்கள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் USGSயும் இதனை முழுமையாக உறுதி செய்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலின் டெக்டோனிக் தட்டு (Tectonic Plate) எல்லைகளுக்கு அருகில் நிகழும் வழக்கமான நில அதிர்வுகளில் ஒன்றாகும். இப்பகுதியில் அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் பதிவாகுவது இயல்பானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
EQ of M: 6.0, On: 01/11/2025 02:23:24 IST, Lat: 45.28 S, Long: 96.85 E, Depth: 10 Km, Location: Indian Ocean.
— National Center for Seismology (@NCS_Earthquake) October 31, 2025
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjdtw0 @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/2TuX8cvT5a
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |