மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் - வார ராசிபலன்
வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.
கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.
இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
இந்த வாரம் மேஷ ராசியினருக்குப் புகழும், கௌரவமும் பெருகும் வாரமாக அமைகிறது. ராசிநாதன் செவ்வாயின் அருளால் எதிலும் துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும், சுற்றமும் நட்பும் உங்கள் ஆலோசனைகளை நாடி வருவர். சமூக நற்பணிகளை முன்னாள் நின்று செய்வீர்கள்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும், உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். வங்கி கடன் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடன் கைவந்து சேரும்.
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். செவ்வாய்க்கிழமை அன்று முருகப்பெருமானை வழிபட்டு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்வது நன்மைகளை இரட்டிப்பாக்கும்.
கடகம்
சந்திரனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த வாரம் மனமகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். குழப்பங்கள் நீங்கி மனம் தெளிவு பெறும்.

தாயின் உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்படும், பூர்வீக சொத்து விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் உறவு இனிக்கும்.
உத்தியோகத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும், கூட்டுத்தொழில் புரிவோர் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.
ரியல் எஸ்டேட்டில் குத்தகை ஒப்பந்தங்கள், வாடகை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஷேர் மார்க்கெட்டில் பெரிய முதலீடுகளை இந்த வாரம் தவிர்க்க வேண்டும்.
முதுகு, சிறுநீரகம் ஆகியவற்றில் சிக்கல் ஏற்பட்டு விலகும். அடிக்கடி நீர் பருகவும். அதிகாலையில் மஞ்சள் கலந்த தண்ணீரை அரச மர வேருக்கு ஊற்றுவது, நாய்களுக்கு உணவளிப்பது ஆகியவை நன்மை தரும்
விருச்சிகம்
நல்லது நடக்க ரகசியமாக செயல்படும் விருச்சிகம் ராசியினர் இந்த வாரம் நெருங்கிய நண்பர்களோடு அளவளாவி மகிழ்வார்கள். தகவல் தொடர்புகள் மூலம் பொருளாதார நிலை உயரும்.

தொழில்துறையினர் தங்களுடைய நெட்வொர்க்கிங் முறைகளில் மாற்றம் செய்ய வேண்டும்.
ஷேர் மார்க்கெட்டில் மீடியா மற்றும் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் லாபம் தரும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் சந்தேகத்தை கேட்டு தெளிவு பெற வேண்டும்.
தூக்கமின்மை, தோள்பட்டை, கை, கால் ஆகியவற்றில் வலி ஏற்பட்டு வைத்தியம் மூலம் குணமடையும். காலை நேரங்களில் பசு மாட்டுக்கு கீரை அல்லது புல் உணவாக கொடுப்பதும், நடைப்பயிற்சியும் நன்மை தரும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |