எம்.பிக்களின் வேதனம் எங்கே வைப்பிலிடப்படுகின்றது...விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் குறித்து கையூட்டல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நாடாளுமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஒரு குறிப்பிட்ட கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது அந்தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விளக்கம் கோரல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஆணைக்குழுவிடம் பதில் கோரல்
தேசிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த கொடுப்பனவுகள் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும், இது ஊழல் என்றும் அவர் தனது முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போதுள்ள சட்ட விதிகளின் கீழ், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஆணைக்குழுவிடம் பதில் கோருவதாக கம்மன்பில தமது முறைப்பாட்டில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |