அநுரவின் திடகார்த்த நடைபயணத்திற்கு காரணமாகிய சுமந்திரன்!
இலங்கையின் அரசியல் மேடையில் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னேற்றம் பெற்று வரும் நிலையில், தமிழ் அரசியல் தரப்பின் முக்கிய முகமாக அறியப்படும் எம்.ஏ. சுமந்திரன் மேற்கொள்ளும் நகர்வுகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.
2024 தேர்தலுக்குப் பிறகான அரசியல் சூழலில், பாரம்பரிய கட்சிகள் பலவீனமடைந்துள்ள நிலையில், புதிய அதிகார மையமாக உருவெடுத்துள்ள NPP அரசியல் ஆதிக்கத்தை வடக்கு–கிழக்கிலும் விரிவுபடுத்த முயற்சி செய்து வருகிறது.
இதன் பின்னணியில், தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த சட்டத்தரணியுமான சுமந்திரன், அநுர தலைமையிலான அரசியல் மாற்றங்களை முழுமையாக நிராகரிக்கவும் இல்லை; அதே நேரத்தில் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவும் இல்லை.
அவர் சமீபத்திய கருத்துகளில், “தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை பொருளாதார சீரமைப்பால் மட்டும் தீராது” என வலியுறுத்தி வருகிறார்.
அனுரவின் ஊழல் எதிர்ப்பு, பொருளாதார மறுசீரமைப்பு போன்ற கோரிக்கைகளை அவர் வரவேற்கும் போதிலும், அதிகாரப் பகிர்வு, அரசியலமைப்புச் சீர்திருத்தம், போர் பிந்தைய நீதி, காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை ஆகியவை குறித்து தெளிவான அரசியல் உத்தரவாதம் தேவை என்பதை அடித்துக்கூறும் அளவுக்கு அவரின் கருத்துக்கள் அமையவில்லை.
NPP, இன அரசியலைவிட “மக்கள் அரசியல்” என்ற கோஷத்துடன் முன்னேறி வருகிறதாலும், தமிழ் தேசிய அரசியலின் மையக் கோரிக்கைகள் அதில் கரைந்துவிடும் என்ற அச்சம் வடக்கு - கிழக்கு அரசியல் வட்டாரங்களில் நிலவுகின்றமை தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐ.பி.சி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |