வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர்

Today Rasi Palan Horoscope Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Thulsi Apr 25, 2026 02:35 AM GMT
Report

வாரத்திற்கான ராசி பலனை நாம் முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் முன்னெச்சரிக்கையாக சில செயல்களை திட்டமிட்டு மேற்கொள்ளும் போது நினைத்த காரியங்கள் வெற்றி பெறும்.

கிரக நிலைக்கு ஏற்ப ராசிபலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சரியாக முடிவு செய்தால் வெற்றி நிச்சயமாகும்.

இந்நிலையில், திங்கள் முதல் வெள்ளி வரை எந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதை பார்க்கலாம்.

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை...! விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மேஷ ராசி

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியுமான சூழ்நிலையே காணப்படும். பணவரவு திருப்தி தருவதாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட நேரிட்டால் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும்.

உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டி ருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும் என்றாலும் அதனால் பாதிப்பு இருக்காது.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

வெளியூர்ப் பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும். புதிய வேலைக்கு முயற்சி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். சில சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்க சற்று கூடுதல் உழைப்புத் தேவை. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும்.

புதிய முதலீடுகள் தவிர்க்கவும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சுகாதாரச் சீர்கேட்டுடன் வெதுப்பகப் பொருட்கள் விற்பனை: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மிதுனம் ராசி

சுறுசுறுப்பாகவும் பரபரப்பாகவும் செயல்படும் வாரமாக இருக்கும். நீங்கள் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தங்கள் பணிகளில் உங்கள் உதவியை நாடி வருவார்கள். சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம்.

அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஆனால், சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது. 

கடக ராசி 

அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும்.

வாழ்க்கைத்துணைவழி உறவினர் களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையிடன் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.

வியாபாரத்தை விரிவுபடுத்தவும், வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றவும் வாய்ப்பு உண்டாகும். பங்குதாரர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.

சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்ளவும். புகுந்தவீட்டு உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். அலுவலகம் செல்பவர்களுக்கு திருப்தி தரும் வாரம். சலுகைகளும் கிடைக்கும்.

விருச்சிக ராசி 

பணப்புழக்கம் அதிகரிக்கும் வாரம். குடும்பம் தொடர்பான பிரச்னை ஒன்றுக்கு கணவன் – மனைவி இருவரும் கலந்து பேசி முடிவு எடுப்பீர்கள். குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள வேண்டி வரும்.

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இதுவரை ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் குறையும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகளில் ஈடுபட சாதகமான வாரம். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவைப்படும்.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

தந்தைவழியில் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் இப்போது ஈடுபடலாம். நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். சிலர் வாடகை இடத்தில் இருந்து சொந்த இடத்துக்குக் கடையை மாற்றி விரிவுபடுத்துவீர்கள். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் கூடுதல் வேலை செய்யவேண்டி இருக்கும்.

தனுசு ராசி

வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படக்கூடும்.

மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நண்பர்கள் தக்க தருணத்தில் உதவி செய்வார்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம்.

பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பங்குதாரர்களும் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் ஓரளவு நிறைவேறும்.

மீன ராசி 

எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே ஏற் பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

சிலருக்கு அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. சிலருக்கு வெளியூர்களில் இருக்கும் புகழ் பெற்ற புனிதத் தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வார ராசிபலன் - பேரதிர்ஷ்டம் காத்திருக்கும் 5 ராசியினர் | Top 5 Zodiac Signs Weekly Rasi Palan In Tamil

சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒரு சிலருக்கு இருக்கும் இடத்தில் இருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதனால் நன்மையே நடக்கும்.

எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகளும் கிடைக்கும்.

மன்னாரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியப் பதிவு!

மன்னாரில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சாட்சியப் பதிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026