ஹிஸ்புல்லாவின் மற்றுமொரு தளபதியை வீழ்த்தியது இஸ்ரேல்
தெற்கு லெபனானில்(lebanon) இஸ்ரேலியப் (israel)படைகளுக்கு எதிரான ரொக்கெட் மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்களை மேற்பார்வையிட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு உயர்மட்ட ஹிஸ்புல்லா தளபதியைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் திங்கள்கிழமை (நவம்பர் 4) தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள பராச்சிட் பகுதியின் ஹிஸ்புல்லா தளபதி அபு அலி ரிடா வான்வழித் தாக்குதலில் "அழிக்கப்பட்டார்" என்று இராணுவம் கூறியது, அவர் எப்போது கொல்லப்பட்டார் என்பதைக் குறிப்பிடவில்லை.
இஸ்ரேல் படையினர் மீதான தாக்குதல்
“ரிடா இஸ்ரேலிய துருப்புக்கள் மீது ரொக்கெட் மற்றும் தாங்கி எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் பொறுப்பானவர் மற்றும் அப்பகுதியில் ஹிஸ்புல்லா செயல்பாட்டாளர்களின் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டார்" என்று இராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் பிற்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே போர் வெடித்ததில் இருந்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகளை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது.
ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதிகள் பலி
சமீபத்திய வாரங்களில், முன்னாள் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உட்பட அமைப்பின் பல போராளித் தளபதிகள் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை இஸ்ரேல் கொன்றுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஹமாஸுக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் தனது கொடிய போரை நடத்தி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |