துடுப்பாட்ட போட்டி வீரருக்கான 2022 ஐசிசி விருது - பரிந்துரை பட்டியலில் நடப்பு வீரர்
இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட போட்டி வீரருக்கான ஐசிசி விருது விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
டி20 உலக கோப்பை இந்த ஆண்டு நடைபெற்றதால் பல்வேறு அணிகளும் ஒருநாள் துடுப்பாட்ட போட்டிகளில் கவனம் செலுத்தவில்லை.
குறிப்பாக இந்திய அணி மிகவும் குறைவான அளவில் ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடியது.
பாபர் அசாம்
இருப்பினும் ஸ்ரேயாஸ் ஐயர், சுப்மான்கில், இசான் கிஷன் போன்ற வீரர்கள் எல்லாம் சாதனை படைத்தார்கள். ஆனால் அதில் ஒருவரை கூட ஐசிசி பரிந்துரை பட்டியலில் சேர்க்கவில்லை.
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் பாகிஸ்தான் துடுப்பாட்ட போட்டி வீரர் பாபர் அசாம். ஒன்பது போட்டிகளில் விளையாடி 679 ஈட்டங்களை அவர் பெற்றிருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு ஐசிசி ஒருநாள் துடுப்பாட்ட போட்டி வீரருக்கான விருதை பாபர் அசாம் தான் வென்றார். இதனால் அதே சாதனையை மீண்டும் அவர் செய்வாரா என்று எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.
துடுப்பாட்ட போட்டி தரவரிசை
ஜூலை 2021 ஆம் ஆண்டு முதல் பாபர் அசாம் தான் தொடர்ந்து ஒரு நாள் துடுப்பாட்ட போட்டி தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். நடப்பாண்டில் மட்டும் பாபர் அசாம் எட்டு அரைசதமும், மூன்று சதமும் அடித்திருக்கிறார்.
நடப்பாண்டில் பாபர் அஸாம் ஒன்பது ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை தலைமை தாங்கி எட்டு ஆட்டங்களில் வென்றிருக்கிறார். குறிப்பாக நடப்பாண்டில் 73 பந்துகளில் பாபர் அசாம் சதம் விளாசினார்.
அவுஸ்திரேலிய வீரர் எடம் சாம்பா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருத்திரார். 12 ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடி 30 விக்கெட்டுகளை அவர் வீழ்த்திருக்கிறார்.
2016 ஆம் ஆண்டும் இதே போன்ற 30 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் அவர் விளையாடிய 12 போட்டிகளில் 9 ஆட்டங்கள் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமே இல்லாத அவுஸ்திரேலிய மைதானங்களில் தான் நடைபெற்றது.
சிக்கந்தர் ராசா
சம்பா அபார பந்துவீச்சால் 196 ஓட்டங்கள் என்ற இலக்கை எட்ட முடியாத நியூசிலாந்து அணி 82 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதில் எடம் சம்பா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
சிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசாவும் சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட போட்டி வீரருக்கான பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்.
சிக்கந்தர் ராசா 15 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 645 ஒட்டங்களை அடித்திருக்கிறார். இதில் இரண்டு அரை சதமும் மூன்று சதமும் அடங்கும்.இதில் இந்தியாவுக்கு எதிராக சிக்கந்தர் ராசா சதம் அடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
சாய் ஹோப் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் மேற்கிந்திய தீவு வீரர் ஆவார். 21 போட்டியில் விளையாடி 709 ஓட்டங்களை சாய் ஹோப் அடித்திருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு நாள் துடுப்பாட்ட போட்டிகளில் மேற்கிந்திய தீவு அணிக்காக அதிக ஓட்டங்களை அடித்த வீரர் என்ற பெருமையை சாய் ஹோப் படைத்து வருகிறார்.
2022 ஆம் ஆண்டில் ஆண்கள் சர்வதேச துடுப்பாட்ட போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20) சிறந்த ஒட்டுமொத்த செயல்பாட்டாளருக்கான ஐசிசியின் விருது.
- பாபர் அசாம்
- பென் ஸ்டோக்ஸ்
- சிக்கந்தர் ராசா
- டிம் சவுத்தி
ஐசிசி மகளிர் துடுப்பாட்ட வீராங்கனைக்கான ஒட்டுமொத்த செயல்பாட்டாளருக்கான விருது
- ஸ்மிருதி மந்தனா
- அமெலியா கெர்
- பெத் மூனி
ஐசிசி ஆடவர் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஒட்டுமொத்த செயல்திறனுக்காக விருது
- பென் ஸ்டோக்ஸ்
- ஜானி பேர்ஸ்டோவ்
- உஸ்மான் கவாஜா
- ககிசோ ரபாடா
ஐசிசி ஆடவர் ஒருநாள் போட்டிகளுக்கான செயல்பாட்டாளருக்கான விருது
- பாபர் அசாம்
- ஆடம் ஜம்பா
- சிக்கந்தர் ராசா
- ஷாய் ஹோப்
ஐசிசி மகளிர் போட்டிகளுக்கான பெண் செயல்பாட்டாளருக்கான விருது
- ஷப்னிம் இஸ்மாயில்
- அமெலியா கெர்
- நாட்ஸ்கிவர்
- அலிசா ஹீலி
ஐசிசி ஆடவர் டி20 துடுப்பாட்ட போட்டிகளின் ஒட்டுமொத்த செயல்பாட்டாளருக்கான விருது
- சூர்யகுமார் யாதவ்
- சிக்கந்தர் ராசா
- சாம் கர்ரன்
- முகமது ரிஸ்வான்
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
