போராட்டத்தில் பங்கேற்றவர்கள் சித்திரவதை -ஆதிவாசிகளின் தலைவர் விடுத்த கோரிக்கை
Galle Face Protest
Sri Lankan Peoples
Gota Go Gama
By Sumithiran
உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை தடுத்து வைத்து உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னியலத்தோ தெரிவித்துள்ளார்.
தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேவுக்கு எதிரான தண்டனையை மீள்பரிசீலனை செய்யுமாறு அவர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தவறு நடந்திருந்தால் தகுந்த தண்டனை
தவறு நடந்திருந்தால் தகுந்த தண்டனை வழங்குவது நியாயம், ஆனால் அவர்களை நீண்ட காலம் காவலில் வைத்து உடல் மற்றும் மன ரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்குவது ஏற்புடையதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஆதிவாசிகளின் தலைவர் மட்டுமல்ல பலர் இந்த கோரிக்கையை விடுத்த போதிலும் அரசாங்கம் அவற்றை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என பலரும் தமது விசனத்தை வெளியிட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி