காசாவில் இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை முடக்கிய இஸ்ரேல்
இஸ்ரேலினால் காசா பகுதியிலுள்ள இணைய சேவைகள் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த 22 நாட்களாக தொடர்ந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பலியாகியோரின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் காசா பகுதினர் அத்தியாவசிய தேவைகளுக்கே போராடும் நிலையில் உள்ளனர்.
ஆர்வலர்கள் கண்டனம்
இந்நிலையில் இஸ்ரேல் அரசாங்கம் காசா பகுதியிலுள்ள இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் என அனைத்தையும் துண்டித்துள்ளது.
இதனால் இஸ்ரேலில் நடக்கும் எந்த ஒரு விடயமும் உலகத்திற்கு தெரிய வராது என மனித உரிமைகள் ஆர்வலர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இதனால் காசா பகுதியிலுள்ள 2.2 மில்லியன் மக்கள் தொடர்பாக எந்த தகவலும் வெளிவராது. மக்களின் நிலை தான்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாவதோடு அவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை கூட வழங்க முடியாத சூழல் ஏற்படும் தெரிவித்துள்ளனர்.
⚠ Confirmed: Live network data show a collapse in connectivity in the #Gaza Strip with high impact to Paltel, amid reports of heavy bombardment; the company is the last remaining major operator to supply service as connectivity declines amid ongoing fighting with Israel ? pic.twitter.com/nDPf7HnjKF
— NetBlocks (@netblocks) October 27, 2023
மனித உரிமை மீறல்கள்
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல் தொடங்கி 3 வாரங்களை கடந்த பின்னரே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் காசா மக்களுக்கு எதிராக மீறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்பவை வெளியில் தெரிய விடாமல் இருப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என கூறுகின்றனர்.