அரச ஊழியர் தொடர்பில் வெளியான அறிவிப்பு - எடுக்கப்படவுள்ள கடும் நடவடிக்கை
அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தினால், அது தொடர்பில் கடுமையாகச் செயற்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
இன்றைதினம் புத்தாண்டுக்கான பணிகளைத் தொடங்கும் நிகழ்வில் அவர் கூறுகையில்,
பேஸ்புக், வாட்ஸ்அப் இல் மூழ்கி கிடக்கும் அலுவலர்கள்

சில இடங்களில் பொது அலுவலகங்கள் பேஸ்புக், வாட்ஸ்அப் இல் மூழ்கி கிடந்ததால் சேவைகளைப் பெற வந்த மக்கள் அவற்றை பெறாது முதல் நாளே செல்வதைக் கண்டதாகக் கூறினார்.
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது குறித்து சுற்றறிக்கை வெளியிடலாமா என யோசிப்பதாக அவர் கூறினார்.
தனியார் அலுவலகங்கள்

சில தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்கள் தங்கள் மொபைல் போன்களை நுழைவாயிலில் உள்ள லொக்கரில் வைத்துவிட்டு, பணி முடிந்து வெளியில் செல்லும்போது அவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.
தேவை ஏற்பட்டால் அத்தகைய முடிவுகளை எடுக்கவும் தயங்கமாட்டேன் என்றார்.