யானைக்கு பழத்தட்டு கொடுக்க முயன்ற சுற்றுலா வழிகாட்டிக்கு நேர்ந்த கதி!
அளுத்கம, கந்த விகாரை (Kande Vihara Temple) வளாகத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (26-10-2026) இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் அஹங்கல்ல (Ahungalla) பகுதியைச் சேர்ந்த 34 வயதான சுற்றுலா வழிகாட்டி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள்
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உயிரிழந்த சுற்றுலா வழிகாட்டி, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் அடங்கிய குழுவொன்றை வானில் அழைத்துக்கொண்டு அளுத்கம கந்த விகாரைக்கு வருகை தந்துள்ளார்.

விகாரையில் இருந்த யானைக்குப் பழத்தட்டு (Tray of Fruit) ஒன்றைக் கொடுக்க முயன்றபோதே யானை அவரைத் திடீரெனத் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆதார வைத்தியசாலை
யானையின் தாக்குதலுக்கு இலக்காகிப் பலத்த காயமடைந்த அவர், உடனடியாகப் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைக்குச் (Balapitiya Base Hospital) கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அளுத்கம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |