புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்...சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள தாக்கம்!

Sri Lanka Tourism Sri Lanka visa Harin Fernando
By Kathirpriya May 01, 2024 06:03 AM GMT
Report

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்களின் காரணமாக நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை குறைவடையும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,  

"இந்த புதிய விசா நடைமுறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள், வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகையினை 230,000 ஆகவும், வருடத்திற்கான சுற்றுலா வருமானத்தில் 425 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பினையும் ஏற்படுத்தும் சாத்தியம் அதிகரித்துள்ளது.

சினோபெக்கின் எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டது: வெளியானது புதிய அறிவிப்பு

சினோபெக்கின் எரிபொருள் விலையும் குறைக்கப்பட்டது: வெளியானது புதிய அறிவிப்பு

புதிய விசா

எனவே, புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் எதிர்வரும் மே மாதம் 7 ஆம் திகதிக்குள் நிவர்த்தி செய்யப்படும்.

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்...சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள தாக்கம்! | Tourism Visa System Issue Reduce Tourist Arrivals

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் இயக்கப்படும் இலத்திரனியல் பயண அங்கீகார முறையிலிருந்து IVS-GBS மற்றும் VFS Global ஆல் இயக்கப்படும் தளத்திற்கு இலங்கை மாற்றப்பட்டது.

இந்த புதிய தளத்தின் கீழ், 75 அமெரிக்க டொலர் செலவில் பல நுழைவு விசா அறிமுகப்படுத்தப்பட்டது, இவை ஒவ்வொன்றும் அதிகபட்சமாக 60 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது, இதில் ETA ஆல் முன்னர் வழங்கப்பட்ட ஒற்றை நுழைவு விசா விருப்பங்கள் சேர்க்கப்படவில்லை, அதுமாத்திரமன்றி இந்தப் புதிய விசா முறைமையை இயக்குபவரிற்கு சேவைக் கட்டணமாக18.5 அமெரிக்க டொலர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள்: வெளியாகியுள்ள முக்கிய தகவல்

சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை

இந்நிலையில், இந்த 30 நாள் ஒற்றை நுழைவு விசா சேர்க்கப்படாதது பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது மாத்திரமல்லாமல் இது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

புதிய விசா முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்...சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள தாக்கம்! | Tourism Visa System Issue Reduce Tourist Arrivals

அதன்படி முதல் 15 நாட்களில், ஒரு நாளைக்கு சராசரியாக 5500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நிலையில், ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை, சராசரியை விட 3200 ஆகக் குறைந்துள்ளது, எனவே இது எதிர்பார்த்ததை விட 25,000 சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையில் குறைவை ஏற்படுத்தும்.

எனவே இந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர புதிய விசா முறைமையிலுள்ள தொழில்நுட்ப சிக்கல்கள் விரைவில் நிவர்த்தி செய்யப்படும், அதே சமயம் சேவைக்கட்டணத்தில் மாற்றம் எதுவும் ஏற்படாது.

புதிய விசா முறைமையை இயக்குபவரிற்கு சேவைக் கட்டணமாக 18.5 அமெரிக்க டொலர்களுக்கு மேல் கட்டணம் அறவிடும் நாடுகள் உள்ளன, இருந்தபோதிலும் அவர்கள் இலங்கைக்கு குறைந்த பட்ச தொகையினை மட்டுமே கட்டணமாக வசூலிக்கிறார்கள்,எனவே இதனை மாற்ற இயலாது." என்றார். 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026