அரசுக்கு மற்றுமொரு பேரடி - நாளாந்தம் குறையும் சுற்றுலா பயணிகளின் வருகை
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த 5ஆம் திகதி 1,997 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வந்துள்ளனர். மார்ச் மாதத்தில், தினமும் 4,000 முதல் 5,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.
எனினும், இம்மாதம் முதலாம் திகதி முதல் நாட்டிற்கு தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 1ஆம் திகதி 3,222 சுற்றுலாப் பயணிகளும், ஏப்ரல் 2ஆம் திகதி 4,114 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் திகதிகளில் 2,800 சுற்றுலாப் பயணிகளே நாட்டிற்கு வந்துள்ளனர்.
அதன்படி, இம்மாதம் முதல் ஐந்து நாட்களில் 14,836 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் மார்ச் முதல் வாரத்தில் 25,507 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
மார்ச் கடைசி வாரத்தில் நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 31,184 ஆகும்.
அதன்படி, இம்மாதத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
