இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் - முதலிடத்தில் உள்ள நாடு
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 19 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதேவேளை, ஒக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களிலும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிபரங்களில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடுகளின் பட்டியலில்
ஜனவரி 1ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 19 இலட்சத்து 12 ஆயிரத்து 233 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய, நவம்பர் மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மாத்திரம் 49,929 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்திய பயணிகள்
அதன்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 512,026 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 176,670 பேரும், சீனாவிலிருந்து 126,326 பேரும், ஜேர்மனியிலிருந்து 108,754 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்தக் ஒக்டோபர் மாதத்தின் முதல் எட்டு நாட்களிலும் இந்தியாவிலிருந்து 12,401 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |