யாழில் மதுபோதையில் இருந்த காவல்துறையினரால் தாக்கப்பட்ட சுற்றுலா பயணிகள்
யாழ். பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற காவல்துறையினர் தாக்கும் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில்,
சில சுற்றுலா பயணிகள் பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
சுற்றுலா பயணிகள்
இதன்போது குறித்த பகுதியில் இருந்த காவல்துறையினர் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதலை மேற்கோண்டுள்ளனர்.
சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகளே இல்லாது மது அருந்திய நிலையில், அங்கு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காவல்துறையினர் திணைக்கள வாகனத்தில் சென்றுள்ளமை காணொளியில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் மேற்கோண்ட தாக்குதலில் காயமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


