தைப்பொங்கல் நாளில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
2026ஆம் ஆண்டின் ஆரம்பமான முதல் 15 நாட்களுக்குள் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில்131,898 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காலப்பகுதிக்குள், ஒரே நாளில் அதிகளவான சுற்றுலாப் பயணிகளின் வருகை தைப்பொங்கல் தினமான ஜனவரி 15 ஆம் திகதி பதிவாகியுள்ளது.
நாட்டிற்கு வந்த சுற்றுலாப் பயணிகள்
அன்றைய தினம் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10,483 ஆகும் என அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த 15 நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகைதந்த நிலையில்அந்த எண்ணிக்கை 23,786 ஆக பதிவாகியுள்ளது.
அதற்கு மேலதிகமாக, ரஷ்யாவிலிருந்து 14,785 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 12,166 பேரும் மற்றும் ஜேர்மனியிலிருந்து 9,260 பேரும் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |