நச்சுத்தன்மை மிக்க பச்சை உருளைக்கிழங்கு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பச்சை உருளைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சந்துன் ரத்நாயக்க(Sandun Rathnayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இரசாயன மாற்றம்
குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து வாங்குவது என்பது தவறான கருத்து.
உருளைக்கிழங்கு முளைப்பதற்கு தயாராக இருப்பதாலோ, மண்ணில் இருப்பதாலோ அல்லது சேமிப்பின் போது சூரிய ஒளி படுவதனாலோ ஏற்படும் இரசாயன மாற்றத்தினால் உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், உருளைக்கிழங்கு பச்சை நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம், உருளைக்கிழங்கை சேதப்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக solanine and chaconine எனப்படும் இயற்கை இரசாயனங்களால் கிளைகோல்கலாய்டுகளின் உற்பத்தி அதிகரிப்பாகும்.
இந்த பச்சை உருளைக்கிழங்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தது.
வாங்குவதை தவிர்க்க கோரிக்கை
கடை உரிமையாளர்களுக்கு இது நன்றாகவே தெரியும். கடை உரிமையாளர்கள் 10 கிலோ உருளைக்கிழங்கை ஒரு பையாக வாங்குகிறார்கள். அவர்களால் அந்த பைகளில் இருந்து அதனை தெரிவு செய்து எடுக்க முடியாது.
மக்கள் ஒரு பை உருளைக்கிழங்கை வாங்கும்போது, அதன் அளவு சுமார் 700-1000 கிராமாகும். அத்தகைய உருளைக்கிழங்கு இருந்தால், அதனை அகற்றி விடுங்கள்.
நுகர்வோர் பச்சை உருளைக்கிழங்கு வாங்குவதை தவிர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |