உழவியந்திரத்தை மோதி தள்ளியது தொடருந்து : குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலி
பெலியத்தவிலிருந்து (Beliatta) மருதானை (Maradana) நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு தொடருந்து கொஸ்கொட துவேமோதர தொடருந்து கடவையில் கை உழவு இயந்திரத்துடன் மோதியதில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக கொஸ்கொட காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பெந்தோட்டை உள்ளூராட்சி சபையின் ஊழியரும் மஹா இந்துருவை வசிப்பிடமாகவும் கொண்ட திலக் குமாரசிறி என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சாரதி படுகாயமடைந்து
உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
நான்கு பேர் பயணம்
உழவு இயந்திரத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர் உழவு இயந்திரத்தின் பின்னால் இருந்து சென்ற இருவர் தொடருந்து வந்தவுடன் உழவு இயந்திரத்தில் இருந்து குதித்து உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.
இந்த தொடருந்து கடவையில் தானியங்கி சமிக்ஞைகள் மற்றும் ஒளி சமிக்ஞைகள் சில சமயங்களில் சரியாக இயங்குவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |