சிறைச்சாலைகள் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் (Prisons in Sri Lanka) தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு சட்டரீதியான உரிமை கிடையாது எனவும், அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதன் ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க (Gamini Dissanayake) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பீ.திஸாநாயக்க கருத்து வெளியிட்டார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
"மிகச் சிறிய அதிகாரிகள் குழுவொன்று மற்றவர்களை மிரட்டியதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மூத்த அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கையிடுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |