கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிகள்: நடைமுறையாகும் புதிய முறைமை
Sri Lanka Police
Sri Lankan Peoples
Deshabandu Tennakoon
By Dilakshan
பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின் பிரகாரம், போக்குவரத்து விதிகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தேடப்பட்டு, வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அபராதம் அனுப்பப்படும்.
மறுசீரமைப்பு
இதேவேளை, இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பதில் காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன், குற்றப் புலனாய்வு திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு தேசிய காவல்துறை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்