ரஷ்ய தலைநகரில் வீழ்ந்து நொருங்கிய விமானம்: பயணித்தவர்களுக்கு நேர்ந்த துயரம்
Plane Crash
Russia
Moscow
By Sumithiran
ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவில் இன்று (30)காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு இது விழுந்து நொருங்கியது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 4 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரணை
இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்