வெளிநாட்டு தூதுவர்களாக படை அதிகாரிகளை நியமிக்கும் அநுர அரசு
தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக முன்னாள் விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்சவை நியமிக்க உயர் அதிகாரிகள் குழு ஒப்புதல் அளித்தது. பிரதமர் ஹரிணி அமரசூரியா தலைமையில் குழு இன்று (30) கூடியபோது இந்த அனுமதி கிடைத்தது.
இதேவேளை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு அளித்த முன்னாள் படை அதிகாரிகளில் ஒருவரான, றியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன, பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடமைகளை பொறுப்பேற்ற படை அதிகாரி
அவர் கடந்த 26ஆம் திகதி வியாழக்கிழமை இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
பாகிஸ்தானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள றியர் அட்மிரல் பிரெட் செனெவிரத்ன, ஓய்வுபெறுவதற்கு முன்னர் சிறிலங்கா கடற்படையின் அனைத்து கடல்சார் நடவடிக்கைகள் மற்றும் தரைநடவடிக்கைகள் தொடர்பாக, கண்காணித்து, மேற்பார்வை செய்யும், சிறிலங்கா கடற்படைத் தளபதிக்கான ஆலோசகராகவும், கடற்படையின் தரைச் செயற்பாடுகள் மற்றும் பிற ஆயுதப் படைகளுடன் கடல்சார் செயற்பாடுகளிலிருந்து உகந்த முடிவுகளை அடைவதற்கான திட்டங்கள் மற்றும் உத்திகளை வகுப்பவராகவும் பணியாற்றியிருந்தார்.
1986ஆம் ஆண்டு சிறிலங்கா கடற்படையில் இணைந்த அவர், 2020ஆம் ஆண்டு ஓய்வுபெற்றிருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
