பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவருக்கு நேர்ந்த துயரம்
Colombo
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஒருவர் உயர் அழுத்த மின்சாரம் தாக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு குளியாபிட்டி பகுதியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றது.இதில் பயிற்சி வகுப்பில் பணியாற்றிய விமுக்தி தில்ஷான் பெரேரா என்ற 28 வயதுடைய நபரே உயிரிழந்தவராவார்.
உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டதால் ஏற்பட்ட அனர்த்தம்
பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டடத்தின் அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியைத் தொட்டதால், மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.
குளியாப்பிட்டி நகர மண்டபத்திற்கு பின்புறம் உள்ள பயிற்சி வகுப்புகள் நடைபெறும் கட்டடத்திற்கு இரும்புக் குழாய் ஒன்றை எடுத்துச் சென்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் குளியாப்பிட்டிய காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்