கொரோனா நோயாளர்களுக்கு ஏற்பட்ட துயரம் - விரட்டி விரட்டி கடித்த விசர்நாய்
corona patient
bite
whisper dog
By Sumithiran
அரசாங்க வைத்தியசாலை ஒன்றில் இருந்த கொரோனா நோயாளர்களை விசர் நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொறவக்க − கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மூன்று பெண்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வைத்தியசாலையின் விடுதியில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 18 பெண்கள் அடங்கலாக 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் வீடு திரும்ப தயாராகி இருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
எனினும், வைத்தியசாலை ஊழியர்கள் நாயை பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில் விரட்டியுள்ளனர்.
வைத்தியசாலைக்கு வெளியில் வைத்து, அங்கிருந்த சிலர் நாயை அடித்து கொன்றுள்ளதாக தெரியவருகிறது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி