கோட்டை நிலைய மேடையை தகர்த்த தொடருந்து! சாரதி இடைநிறுத்தம்
Colombo
Railways
By pavan
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து மேடையை உடைத்து சேதங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் அந்த தொடரூந்தின் சாரதி தற்காலிகமாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை தொடருந்து திணைக்கள பிரதி முகாமையாளர் என். ஜே. இதிபொல தெரிவித்துள்ளார்.
விசாரணைகள்
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணிக்கவிருந்த தொடருந்து ஒன்று நேற்று திங்கட்கிழமை (15) பிற்பகல் கோட்டை தொடருந்து நிலையத்தின் முதலாவது மேடையில் நிறுத்த முயற்சித்தபோது அங்கிருந்த தடுப்பையும் தொடருந்து மேடையையும் உடைத்துக் கொண்டு சென்றது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இதிபொல விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி