தொடருந்து பாதையில் சடலமாக மீட்கப்பட்ட 53 வயதுடைய நபர்! வெளியான பின்னணி
Sri Lanka
Accident
Death
By pavan
குடா பயாகல பிரதேசத்தில் தொடருந்தில் மோதி தொடருந்து பாதையில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று (15) பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கி பயணித்த கடுகதி தொடருந்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
மக்கொன, நிர்மலவத்த பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனை
பிரேத பரிசோதனைக்காக சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பயாகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி