வெளிநாடொன்றில் இடம்பெற்ற தொடருந்து விபத்து: இருவர் பலி! பலர் படுகாயம்
தென் அமெரிக்க (Soth America) நாடான சிலியின் (Chile) தலைநகருக்கு வெளியே சோதனை ஓட்டத்தின் போது சரக்கு எற்றும் தொடருந்து மற்றொரு தொடருந்துடன் நேருக்கு நேர் மோதியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1,500 தொன் தாமிரத்தை (Copper) ஏற்றிச் செல்லும் சரக்கு தொடருந்தும் அந்த வழியாகச் சென்று கொண்டிருந்த மற்றொரு தொடருந்தும் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சீன பிரஜைகள்
விபத்தில் உயிரிழந்த இருவர் சரக்கு தொடருந்தில் இருந்த பணியாளர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
மேலும், சோதனை தொடருந்தை இயக்கிய நான்கு சீன (China) பிரஜைகள் உட்பட ஒன்பது பேர் இதன்போது காயமடைந்துள்ளனர்.
இவர்களில் ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த தொடருந்து விபத்துக்குள்ளானதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |






உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 3 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்