இன்று முதல் உயர்கிறது மற்றுமொரு கட்டணம்! வெளியானது அதிவிசேட வர்த்தமானி
தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று (01) முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தொடருந்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தவிரவும், இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி
அந்த வர்த்தமானியில், இக்கட்டண அதிகரிப்பானது இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டண அதிகரிப்பு
அதற்கமைய 50 ரூபா குறைந்த பட்ச கட்டணம் 150 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2024) பெறுமதி சேர் வரியில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்த கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |