திடீரென பற்றி எரிந்த தொடருந்து: பங்களாதேஷில் சம்பவம்
Bangladesh
World
By Dilakshan
பங்களாதேஷில் மேற்கு நகரமான ஜெஸ்ஸோரில் இருந்து தலைநகர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பெனபோலே விரைவு தொடருந்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தொடருந்தில் திடீரென நான்கு பெட்டிகளில் பயங்கரமாக தீ பற்றி எரிந்துள்ளது, அதன் போது, தொடருந்து உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
பயணிகள் மீட்பு
பின்னர், தொடருந்து பெட்டிகளில் தீ பற்றி எரிந்ததை அவதானித்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பயணிகள் பலரையும் மீட்டுள்ளனர்.
மேலும், தீ விபத்துக்குள்ளான தொடருந்தில் இந்தியர்களும் பயணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த தீ விபத்து நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் அந்த கோணத்திலும் விசாரணை நடப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்