ஜனாதிபதி தேர்தலன்று தொடருந்து சேவை தொடர்பாக வெளியான தகவல்
Sri Lanka
Sri Lanka Railways
Railways
By Shalini Balachandran
எதிர்வரும் 21ஆம் திகதி தொடருந்து நேர அட்டவணை வழமை போல நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை தொடருந்து பிரதிப் பொது முகாமையாளர் நந்தன இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
நேர அட்டவணை
அத்தோடு, 22 ஆம் திகதி நீண்ட தூர தொடருந்து சேவையில் ஈடுபடும் எனவும், குறுகிய தூர தொடருந்துகளில் சில குறைப்புக்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்காக கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையில் விசேட தொடருந்துகளை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்