ரயில் பயணத்தில் சிகரெட்டால் ஏற்பட்ட மோதல்
தெமட்டகொடை தலைமை பொறியியலாளர் தலைமையகத்திற்குள் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த புகையிரத உப கட்டுப்பாட்டாளர் மற்றும் புகையிரத பாதுகாப்பு படையின் சார்ஜன்ட் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோதலில் ஈடுபட்டு காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெமட்டகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
பிரதான வாயிலில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த புகையிரத பாதுகாப்பு படையின் சார்ஜன்ட் சாதாரண உடையில் ஒருவர் சிகரெட் புகைப்பதைக் கண்டு அந்த நபரிடம் புகைப்பிடிக்க வேண்டாம் என்று கூறியதாக ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புகையால் வந்த மோதல்
இதன்போது சிகரெட் புகைத்துக் கொண்டிருந்த நபர், தான் ரயில்வே உப கட்டுப்பாட்டாளர் எனக்கூறி தனது அடையாள அட்டையை புகையிரத பாதுகாப்பு படையின் சார்ஜன்ட் முகத்தில் வீசியதாக கூறப்படுகிறது.

புகையிரத பாதுகாப்புப் படையின் சார்ஜன்ட் தாக்கப்பட்டதைக் கண்ட ஊழியர்கள் சிலர், சார்ஜென்ட்டைத் தாக்கிய நபரை உடனடியாகப் பிடித்ததாகவும், அவரும் தாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததாகவும் ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராக்களை பரிசோதித்த போது இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் காணப்பட்டதாக திணைக்கள வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
சீருடை அணிந்திருக்கவில்லை
புகையிரத பாதுகாப்பு படையின் சார்ஜன்டை தாக்கியதாக கூறப்படும் பிரதி கட்டுப்பாட்டாளர் அப்போது சீருடை அணிந்திருக்கவில்லை என திணைக்கள வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இந்த ரயில்வே உப கட்டுப்பாட்டாளர் அண்மையில் சேவையில் இணைந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
