அழகுகலை நிபுணர்களுக்கு அடித்தது அதிஷ்டம் - இங்கிலாந்து பல்கலையில் கற்க வாய்ப்பு
பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் அழகுகலை கற்கைநெறிகளை தொடர்வதற்கு 500 அழகுக்கலை நிபுணர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த(Piyal Nishantha) தெரிவித்துள்ளார்.
100 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அழகுத் துறையுடன் தொடர்புடைய நான்கு துறைகளில் பாடநெறிகளை கற்க இலங்கை அழகுக்கலை நிபுணர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்ற இந்தப் பாடநெறியானது பிரித்தானிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடத்தப்படும் விரிவுரைகளில் சிங்கள மொழியில் உதவுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
அழகுத் துறையில் ஈடுபட்டுள்ள பிரித்தானிய பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
