விமானியின் பயத்தில் ஏற்பட்ட விபத்து - மீண்டும் வைரலாகும் காணொளி ஆதாரங்கள்
கடந்த 2015ம் ஆண்டு, TransAsia ஏர்வேஸ் 235 விமான விபத்தில், இரண்டு பாதியாக பிரிக்கப்பட்ட மகிழுந்தின் காட்சிகள் தற்போது இணையத்தில் மீண்டும் பரவி வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சீனாவின் முக்கிய விமான நிலையம் நோக்கி பறந்த TransAsia ஏர்வேஸ் விமானம் 235 க்கு நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த விமானம் பாலத்தின் மீது மோதி அங்கு இருந்த நீர் நிலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானியின் பயத்தில் ஏற்பட்ட விபத்து
#OTD in 2015, TransAsia Airways Flight 235 crashes into the Keelung River shortly after takeoff. Pilot error. Killing 43. pic.twitter.com/3r7CnYInKZ
— Air Disasters (@AirCrashMayday) February 4, 2017
விமானத்தில் 58 பேர் வரை பயணம் செய்த நிலையில் 15 பேர் மட்டுமே உயிர் தப்பியதோடு ஏனைய 43 பேரும் பரிதாபமாக விபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக அப்போதைய வான் விபத்து ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பிறகு கிடைத்த ஒலி ஆதாரங்கள் மற்றும் விசாரணையில் சக விமானியின் பயத்தில் ஏற்பட்ட விபத்து இது என உறுதிப்படுத்தப்பட்டது.
இரண்டு இயந்திரங்களும் அணைக்கப்பட்டதால்
TransAsia ஏர்வேஸ் விமானம் 235 தைவான் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, விமானத்தின் வலது புறம் உள்ள இயந்திரத்தில் இருந்து புகை வெளியேறி அதன் ஆற்றலை இழந்துள்ளது.
இதையடுத்து விமானத்தின் விமானி லியாவோ சியென்-சுங் மற்றும் அவரது துணை விமானி லியு டிசே-சுங் இடையே நடந்த உரையாடல் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டு, விமானத்தின் சக விமானி இரண்டாவது இயந்திரத்தை பயத்தில் தவறுதலாக நிறுத்தியுள்ளார்.
விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் நிறுத்தப்பட்டதால், தாழ்வான உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்
VIDEO TransAsia Airways Flight 235 crashes into the Keelung River, Taiwan. Engine failure & pilot error. Killing 43. (4-FEB-2015). pic.twitter.com/2kC8lIpcLc
— Air Disasters (@AirCrashMayday) February 4, 2017
இந்த விமான விபத்தின் போது, பாலத்தின் மீது சென்று கொண்டு இருந்த மகிழுந்து மீது விமானத்தின் இறக்கைகள் மோதி மகிழுந்தை இரண்டு பாதிகளாக பிரித்து சென்ற காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதில் அதிர்ஷ்டவசமாக மகிழுந்தில் இருந்த இருவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்