யாழில் திருநர் விழிப்புணர்வு நடைபயணம்(படங்கள்)
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
Transgender
By Shadhu Shanker
யாழ் திருநர் வலையமைப்பின் ஏற்பாட்டில் திருநர் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நகரில் விழிப்புணர்வு நடைபயணமொன்று மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை(19) காலை 10 மணியளவில் ஒன்றுகூடியவர்கள் நகரை சுற்றி நடைபயணத்தில் ஈடுபட்டனர்.
மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி
இந்த சமூகத்தில் வாழ்கின்ற அனைவரும் சமூக பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்துவதோடு திருநர் சமூகத்தினரை ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கி ஒடுக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம், மனிதர்களை மனிதர்களாக மதிப்போம் என நடைபயணத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.

திருநர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையால் உயிரிழந்தவர்களுக்கு இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |







அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி