இலங்கை தேர்தல் வரலாற்றில் களமிறங்கும் முதல் திருநங்கை
Kegalle
Transgender
General Election 2024
By Sumithiran
இலங்கை(sri lanka) தேர்தல் வரலாற்றில் திருநங்கை ஒருவர் முதன் முறையாக போட்டியிடவுள்ளார்.
இதன்படி சோசலிச கட்சியின் மகளிர் விவகார செயலாளர் சானு நிமேஷா(Chanu Nimesha), எனும் திருநங்கையே தேர்தலில் போட்டியிடவுள்ள முதல் திருநங்கை என்ற வரலாற்றை படைத்துள்ளார்.
இவர் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேகாலை(kegalle) மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
இலங்கை சோசலிச கட்சிக்கு நன்றி
இந்நிலையில் “பொதுத் தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பளித்த இலங்கை சோசலிசக் கட்சிக்கு நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
முதன்முறையாக தேர்தலில் போட்டியிட திருநங்கை ஒருவரை நிறுத்தியதன் மூலம் சரித்திரம் படைத்துள்ளேன் ” என்று நிமேஷா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்