சிக்கினார் “போலி போதை வைத்தியர்”! கடற்படை வீரர்களின் ஆடையும் மீட்பு
Police
Colombo
Arrest
Ajith Rohana
SriLanka
By Chanakyan
வைத்தியர் என்ற போர்வையில் காரில் ஒருதொகை கஞ்சாவை கடத்திச் சென்ற நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவர் மருதானைப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து 38 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அவர் வைத்தியர் அல்ல என தெரியவந்துள்ளது.
இதேவேளை, மருதானை பகுதியில், கடற்படை வீரர்கள் பயன்படுத்தும் ஆடையணிந்திருந்த நபரொருவரிடமிருந்து ஐஸ் மற்றும் கஞ்சா ஆகியவற்றை மீட்டுள்ளனர்.
இவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 610 மில்லிகிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்