பயணக்கட்டுப்பாடு நீக்கம் - கோட்டாபய விடுத்துள்ள அறிவிப்பு
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள மாகாணங்களுக்கிடையிலான பயணக் கட்டுப்பாட்டுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்ட நிலையே உள்ளது.
அத்துடன் திருமண நிகழ்வுகள் கோவில் திருவிழாக்கள் உட்பட்ட நிகழ்வுகளுக்கும் மட்டுப்படுத்தப்பட்ட அனுமதியே வழங்கப்பட்டு உள்ளது.
எனினும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தின் பின் நாட்டை மூடி வைக்கும் எண்ணம் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் 26ம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாத நிறைவில் மேலும் 10.5 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கும் என ஜனாதிபதி கூறியுள்ளார். இந்த தடுப்பூசிகளை ஏற்றினால் 80% தடுப்பூசி ஏற்றப்பட்டு முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டை முடக்கி வைத்திருந்ததே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என ஜனாதிபதி இதன்போது அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.