தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களால் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (Telecommunication Regulatory Commission of Sri Lanka (TRCSL) மறுத்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுயின் பணிப்பாளர் இந்திரஜித் ஹந்தபங்கொட (Indrajith Handapangoda) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தவறான பொய் தகவல்களை நம்ப வேண்டாம்
பல சேவை வழங்குனர்கள் கட்டணங்களை இரகசியமான முறையில் அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு உடனடியாக அனைத்து சேவை வழங்குநர்களிடமும் விசாரித்த நிலையில், வழங்குநர்களும் கட்டணங்களை அதிகரிக்கவில்லை என்று எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான பொய் தகவல்களை நம்ப வேண்டாம் என்று பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |