கோட்டாபயவுக்கு எதிரான விசாரணை..! உயர்நீதிமன்றம் அனுமதி: நெருக்கடிக்குள் சிக்கிய ராஜபக்சர்கள்
Basil Rajapaksa
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
By Kiruththikan
விசாரணை
நாட்டில் கடந்த 70 வருடங்களில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்றைய தினம் (07.10.2022) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும் விசாரணையை முன்னெடுக்க இலங்கையின் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்
இதனை தவிர முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்கள் ஆகியோருக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெசனல் உட்பட்ட தரப்புக்களால் அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்