புலனாய்வாளர்களின் கண்காணிப்பிற்கு மத்தியில் பாப்பரசருக்கு அஞ்சலி
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாப்பரசர் புனித பிரான்சிஸ் அவர்களின் அஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது.
கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸ்சிஸ் வத்திகானில் உயிரிழந்திருந்தார். அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்கள் இடம்பெற்று வருவதுடன் நாடாளாவிய ரீதியில் துக்க தினமாக இன்று(26) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
காணாமற் போனவர்களின் உறவுகள் அஞ்சலி
அந்த வகையில் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகைக்கு முன்பாக கையில் தீபமேந்தியவாறு அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபமும் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
புலனாய்வாளர்களின் படப்பிடிப்பு
இதேவேளை புலனாய்வாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினை புகைப்படம் எடுத்ததுடன், செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களையும் படம் எடுத்திருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

லண்டனில் சிறிலங்கா இராணுவ அதிகாரியை போன்று கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பாகிஸ்தான் அதிகாரி(வைரலாகும் காணொளி)
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
