திருச்சி கிழக்கில் த்ரிஷாவை களமிறக்கும் முயற்சி! தமிழக முதலமைச்சர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்குத் தொகுதியில் நடிகை த்ரிஷாவைக் களமிறக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தொகுதியில் உள்ள தேவாலயங்களை மையமாகக் கொண்டு த்ரிஷாவுக்கு ஆதரவாக இரகசிய வாக்குச் சேகரிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் பனையூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, த.வெ.க தேர்தல் வியூக ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி குறித்த தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்பட்ட நிலையில், அண்மையில் கோவையில் த்ரிஷா நடத்திய வீதி உலா அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய்யின் ஆலோசகர்கள் யோசனை
அத்துடன், விஜய்யுடன் த்ரிஷா நெருக்கமாக இருப்பதும் இந்த ஊகங்களுக்கு வலுசேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோரை எதிர்கொள்ளும் வகையில் த்ரிஷாவைக் களமிறக்குவது தொடர்பிலும் ஆலோசனைகள் இடம்பெறுவதாகக் கூறப்படுகிறது.
எனினும், திருச்சி கிழக்குத் தொகுதிக்கான வேட்பாளர் தொடர்பில் விஜய் இதுவரை இறுதி முடிவை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், 2028ஆம் ஆண்டு வெற்றிடமாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு த்ரிஷாவைப் பரிந்துரைத்து அவரை நாடாளுமன்ற உறுப்பினராக்கலாம் எனவும் விஜய்யின் ஆலோசகர்கள் யோசனை முன்வைத்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |