மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி!
மக்களவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இந்த நகர்வு, ‘இண்டியா’ கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், “காங்கிரஸ் கட்சியுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி
நான் ஏற்கனவே மேற்கு வங்கத்தில் நாங்கள் தனித்து போட்டியிடுவோம் என்று கூறி வந்தேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
நாங்கள் மதசார்பற்ற கட்சி. மேற்கு வங்கத்தில் பாஜகவை நாங்கள் தோற்கடிப்போம்.
காங்கிரஸ் முன்வைத்த அனைத்து முன்மொழிவுகளையும் அவர்கள் நிராகரித்தார்கள். அதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் முடிவை நாங்கள் எடுத்தோம்.
ராகுல் காந்தியின் யாத்திரை
நாங்கள் இண்டியா கூட்டணியில் இருக்கும் நிலையிலும், ராகுல் காந்தியின் யாத்திரை மேற்கு வங்கம் வழியாக செல்வதை மரியாதைக்காக கூட எங்களுக்குத் தெரிவிக்கவில்லை.
அவர்களுக்கு எங்களுடன் எந்த உறவும் இல்லை. மாநிலக் கட்சிகள் பலமாக உள்ள மாநிலங்களில் அவை தனித்துப் போட்டியிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சி மற்ற இடங்களில் போட்டியிடலாம் என்று நாங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தோம்" என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |