திருமலையில் பிக்குகளை ஏற்றிச்சென்ற வான் -டிப்பருடன் மோதியது -தேரர்களுக்கு ஏற்பட்ட நிலை? (படங்கள் இணைப்பு)
accident
trincomale
injured
bhikkus
By Sumithiran
திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் கந்தளாய் 87 ஆம் கட்டை பகுதியில் டிப்பர் வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக அக்போபுர காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்துச்சம்பவம் இன்று(17) மாலை இடம்பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஹபரணையிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற டிப்பர் ,சேருவில ரஜ மகா விகாரையிலிந்து கம்பஹா பகுதிக்கு பௌத்த பிக்குகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான ஐந்து பௌத்த தேரர்கள் கந்தளாய் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
