தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி வியாபாரம்- பொலிஸாரின் நடவடிக்கை!
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஊரடங்கு நேரத்தில் கடைகளில் வியாபாரம் மேற்கொண்ட ஆறு பேரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றிரவிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கடைகளை திறந்து வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ள நிலையிலே இன்று ஆறு பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் ஹோட்டல்கள் கோழி இறைச்சிக் கடைகள் பேக்கரி ,சில்லறைக் கடைகளை திறந்து வியாபாரம் செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேநேரம் தேவையில்லாமல் பாதைகளில் போக்குவரத்து செய்தவர்கள் மற்றும் வாகனங்களில் சென்றோரையும் பொலிஸாரும் இராணுவத்தினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இம்மாவட்டத்தின் கந்தளாய், முள்ளிப்பொத்தானை மற்றும் மூதூர் போன்ற நகரங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டதோடு வீதிகளிலும் போக்குவரத்துக்களும் இல்லை வியாபாரம் மேற்கொண்ட சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.




