திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் சிக்கிய கஸ்ஸப தேரர்! நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு
புதிய இணைப்பு
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் ஆகியோரின் விளக்கமறியல் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான உத்தரவு இந்த மாதம் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று சம்பந்தப்பட்ட மனுக்களை பரிசீலித்தது.
முதலாம் இணைப்பு
திருகோணமலையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட இரண்டு பிக்குமார்கள் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் கடந்த 19 ஆம் திகதி பிறப்பித்த உத்தரவின் எழுத்துப்பூர்வ நகல் மற்றும் ஒலிப் பதிவுகளை உடனடியாக நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டது.
கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் விளக்கமறியலுக்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
மறுபரிசீலனை
அதன்படி, இந்த மனுவை இன்று பிற்பகல் 1.30 மணிக்கு மறுபரிசீலனைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்மையில் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பான வழக்கில் கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை போதிராஜ விஹாரையில் புத்தர் சிலையை வைத்ததன் மூலம் கடலோர பாதுகாப்பு சட்டங்களை மீறியதாகக் கூறி கைது செய்யப்பட்ட பின்னர் பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பௌத்த பிக்குகள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |