திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை

Trincomalee Sri Lanka Law and Order Buddhism
By Independent Writer Feb 11, 2026 10:25 AM GMT

புதிய இணைப்பு

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10  சந்தேகநபர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று (11) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 

செய்தி - Nickey thomson

முதலாம் இணைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

குறித்த விவகாரத்துடன் தொடர்புடைய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று (11) காலை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் அரசியலமைப்பு புத்தகத்துடன் நீதிமன்றத்திற்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழில் பரபரப்பு: காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் - அரச தரப்பின் நிலைப்பாடு

யாழில் பரபரப்பு: காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் - அரச தரப்பின் நிலைப்பாடு

நீதிமன்றத்திற்கு வந்த கஸ்ஸப தேரர் 

திருகோணமலை டச்பே கடற்கரைக்கு அருகில் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் 17ஆம் திகதிகளில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைத்து கட்டுமானங்களை மேற்கொண்டதாக, கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மை திணைக்களம் முறைப்பாடு செய்திருந்தது.

திருமலை புத்தர் சிலை விவகாரம் : கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை | Trinco Buddha Statue Issue Kassapa Thero In Court

இந்த முறைப்பாடு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட நான்கு தேரர்கள் உள்ளிட்ட 10 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு இன்று (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர், பலாங்கொடை கஸ்ஸப தேரர், திருகோணமலை சுகிதவங்ச திஸ்ஸ தேரர் மற்றும் நந்த தேரர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

மேலதிக தகவல் - NICKEY THOMSON


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019