இலங்கையில் கொரோனாவின் கோர தாண்டவம்- முற்றாக முடங்கியது மற்றுமொரு நகரம்!
trinco
corona
delta
quarentine
By Kalaimathy
திருகோணமலை வர்த்தக சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை மரக்கறி சந்தை மீன் சந்தை, தனியார் கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் ஒரு வாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.
எனினும் அத்தியாவசிய சேவைகளாகிய மருந்தகங்கள் உணவகங்கள் மற்றும் பலசரக்கு கடைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலைத் தடுத்து மக்களை பாதுகாக்கும் வகையிலேயே மேற்படி திட்டம் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு திருகோணமலை நகர சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி