திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்
trinco
people
protest
By Vanan
திருகோணமலை பெண்கள் குழுக்களின் ஒன்றிணைவுடன் திருகோணமலை அனுராதபுர சந்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் மற்றம் சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சகலவிதமான வன்முறைக்கு எதிராக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுகாதார முறைப்படியாக இடைவெளிகளை பேணி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொவிட் தொற்றின் பின்னராக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக தெரிவித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் - குறித்த வன்முறைகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி