நாடு முழுமையாக முடக்கப்படுமா? இராணுவப்பேச்சாளர் வெளியிட்ட அறிவிப்பு
பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர்த்து ஏனைய சகல செயற்பாடுகளையும் முழுமையாக முடக்குவதற்கு கொவிட் செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் நிலாந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் அத்தியாவசிய திட்டங்கள் தவிர்த்து ஏனைய சகல செயற்பாடுகளையும் நாளை மறுதினம் சனிக்கிழமை தொடக்கம் ஒரு மாதத்திற்கு முடக்குவதற்கான தீர்மானத்தை கொவிட் ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுபோன்ற செய்திகள் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களிலும் வெளியாகியிருந்தமையின் காரணமாகவே, புதன்கிழமை இரவு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா விசேட அறிவிப்பொன்றை விடுத்து அதனை மறுத்திருந்தார்.
இவ்வாறான போலியான செய்திகள் வெளியாகின்றமை தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தப்படும் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.