தேங்காய் பறிக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த அவலம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By pavan
புல்மோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேங்காய் பறிப்பதற்காக சென்ற நபர் ஒருவர் மரத்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (19) மாலை பதிவாகியுள்ளது.
கோபாலபுரம்- நிலாவெளி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் தற்பொழுது புல்மோட்டை தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வைத்திய பரிசோதனை

புல்மோட்டை காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் புல்மோட்டை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி